Sunday, May 31, 2009

01.06.2009

இன்று மனம் கொஞ்சம் சோகத்தில் ஆழ்ந்து உள்ளது. அலுவலகத்தில் பாஸ் ஏசி விட்டார்
தவறு என்னுடையது அல்ல, எனக்கு நன்றாக தெரியும், ஆனால் நான் வாதிட வில்லை. வாதிட்டு பயன் ஏதும் இல்லை என்று எனக்கு நன்கு தெரியும்..... அதனால் அதனை நான் பொருட்படுத்த கூடாது. அதை என்னுள்ளே வைத்து குழம்பி கொண்டிருப்பதை விட, தூக்கி எரிந்து விட்டு அடுத்த வேலையை பார்ப்பது தான் சிறந்தது...... நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

Thursday, May 21, 2009

en makkal

எந்த தேசத்தில் வாழ்ந்தால் என்ன, நம்முள் இருக்கும் இன உணர்வை கண்டிப்பாக கட்டுப்படுத்த முடியாது...... தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என்பதை போல.... கண்காணாத தேசத்தில் புரியாத மொழியில் உமது வாழ்க்கை, இது நீங்களாக தேடி கொண்டது தானே, யாரும் உம்மை வற்புறுத்த வில்லையே..... காலத்தின் கட்டாயத்தினால் நாம் வேறொரு நாட்டில் வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது, அதனால் நாம் நம் வாழும் நாட்டை வெறுக்க முடியுமா..? ஒரு வழியில் பார்த்தால் நாம் எல்லாம் அதிர்ஷ்ட சாலிகள், நம் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் வெளி நாடுகளில் நிலை நாட்டுகின்றோமே..... நம் தமிழ் மொழியை மற்ற நாட்டினர் அறிந்து கொள்ள வைக்கும் நாம் கொடுத்து வைத்தவர்கள்தான்...